இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.