Monday, January 6, 2025
Homeஇலங்கைபுலமைப்பரிசில் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி 2,849 பரீட்சை மத்திய நிலையங்களில், 2024 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டதுடன், அதில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments