பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இவ் கலந்துரையாடலின் போது நிறுவனங்களின் தற்போதைய நிலை, தேசிய வேலைத்திட்டத்தின் போது அவர்களின் பங்களிப்பினை அதிகரிக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிறுவனங்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.இந்த கலந்துரையாடலில் அமைச்சர் திரு.அனில் ஜயந்த பெர்னாண்டோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் திரு.சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் திரு.பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.