தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.