பதுளை மாவட்டம் ,மீகஹகிவுல பகுதியில் சுற்றித் திரிவதாகக் கூறப்படும் ஒரு பேய் பெண் உருவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பெண்ணின் உருவம் மாலையிலும் , இரவிலும் வீதி ஓரங்களில் மக்களையும், முச்சக்கர வண்டிகளையும் பின்தொடர்வதாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாக மீகஹகிவுல, பஹல்கெதர மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தார்.முச்சக்கர வண்டி சாரதிகள் , கிராம மக்கள் பலர், இந்த மர்ம உருவத்தை அப்பகுதியில் வீதி ஓரங்களில் பார்த்துள்ளதாகவும் , இதுவரை அந்த மர்ம உருவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.யாரோ ஒருவர் ஏதோ ஒரு திருட்டு அல்லது குற்றச் செயலை செய்யத் திட்டமிடுவதாக சந்தேகம் எழுவதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் தெரிவித்தார்.