பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் சகிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்றையதினம் முல்லைத்தீவு பகுதியில் இருந்து 25 லீட்டர் கசிப்பினை எடுத்துவந்துள்ளார். இதன்போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு பொலிஸாரால், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால், பேருந்தினுள் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.