மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் ஆவார்.