மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் அடைமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யும் என மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.