மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்றது.போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவலைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here