மன்னாரில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெடுக்கு ஒப்பந்தம் வழங்க அரசாங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, கொள்முதல் முறையீட்டு சபையின் (PAB) மேற்பார்வையில் நடத்தப்பட்ட விரிவான மற்றும் வெளிப்படையான முறையீட்டு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் திட்டக் குழுவால் பரிசீலிக்கப்படவில்லை.எனினும், 2024 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொள்முதல் முறையீட்டு சபை (PAB) அமைச்சரவைக்கு பரிந்துரை செய்து, கூடுதல் தகவல்கள் ஒப்பந்த பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதால், இவ்விண்ணப்பத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியது.
இதன்படி, ஒரு அலகு (kWh) மின்சாரத்தை 4.65 அமெரிக்க டொலர் மிகக் குறைந்த விலையில் ஹேலிஸ் பென்டன்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.முன்னர், ஒரு அலகு மின்சாரத்தை 4.88 அமெரிக்க டொலருக்கு வழங்கப்பட்ட ஏலத்துடன் ஒப்பிடும் போது, 3 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.