மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவருகிறது.ஏனைய இருவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார், உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகைதந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்ததோடு, இரண்டு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது