மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றைய தினம் (31) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இறுதியாகக் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த விலை திருத்தம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.அதற்கமைய, டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன்படி, புதிய வருடத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.