உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் இன்றையதினம் (23) கைப்பற்றப்பட்டுள்ளது.மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.J.குணதிலக தலைமையிலன விசேட பிரிவினரால் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) வியாழக்கிழமை முற்றுகையிடப்பட்டது . உடுவில் பிரதேசத்தில் மல்வம் பகுதியில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த முற்றுகையின் போது 330 லீற்றர் கோடா, 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் , தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 39 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கோடா, கடிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.