Thursday, January 16, 2025
Homeஇலங்கைமான், மரை கொம்புகளுடன் பாடசாலை மாணவன் கைது

மான், மரை கொம்புகளுடன் பாடசாலை மாணவன் கைது

சட்டவிரோதமான முறையில் மான், மரை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புத்தளம் – கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்போது, ஒன்பது அடுக்கு மான் கொம்பு, ஒரு அடுக்கு ஒற்றை மான் கொம்பு, மரை கொம்பு, எருமை கொம்பு மற்றும் விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட king conch seashell சங்குகள், சந்தேக நபர்கள் பாவித்த கைத்தொலைபேசிகள், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – நெருக்கடியில் மக்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!