யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் ஏழாலை வடக்கு சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.விபத்து ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.