யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் இன்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா செடியை கைப்பற்றினர்.மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4 அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.