யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக பல்வேறு சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூக ஊடக வலையமைப்பில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகளும் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சமூக ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பாலியல் காட்சிகளை பரிமாறிக்கொள்வதுடன், அந்த உறுப்பினர்களின் தனிப்பட்ட பாலியல் செயல்பாடுகளும் பரிமாறிக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த சமூக ஊடக வலையமைப்பை பயன்படுத்தி மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கான விருந்துகளை நடாத்தியதாக யாழ். தன்னார்வ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.