Wednesday, March 26, 2025
Homeஇலங்கையாழில் மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வயோதிப தாய் ஒருவர் உயிர்மாய்ப்பு

யாழில் மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வயோதிப தாய் ஒருவர் உயிர்மாய்ப்பு

யாழில் மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கணவன் இறந்த பின்னர் குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். மகன் ஒருவர் தினமும் பின்னேரம் தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை. இந்நிலையில் நேற்றையதினம் (20) அந்த மகனுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் மகன் வீட்டுக்கு வரவில்லை.இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்:  சாவகச்சேரியில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு - தாய் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!