யாழில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.இதன்போது 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.யாழ் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து வண்ணார் பன்னை சிவன் கோயில் பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒருவீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்துக் கொண்டிருந்த போது யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பிரிவும் இனைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.