Friday, March 28, 2025
Homeஇலங்கையாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுமி கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல், சிறுமி மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுமி கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல், சிறுமி மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமி ஒருத்தியை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயர் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ள நிலையில் குறித்த சிறுமி குறித்த கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10. வயது சிறுமியை சிறுநீர் கழியும்வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளநிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளது.குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியவாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  தாய்லாந்தின் அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கை சிறுமி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!