மகப்பேற்றுனூடாக பிறந்த சிசுக்களுக்களான நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப்பிரிவு யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்து குறித்த சிகிச்சைப்பிரிவில் மருத்துவப்பாராமரிப்பில் உள்ள குழந்தைகளின் தாயார் இச் சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்தார்.இவ் சிகிச்சைப் பிரிவானது வைத்திய நிபுணர் சி.நித்தியரூபனின் நேரடி கண்காணிப்பிலும் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர்.த.சத்தியமூர்த்தியின் வழிகாட்டலிலும் செயல்ப்பட்டு வருகிறது.