மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 48.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று முன்னால் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, வேனின் சாரிதியும் அதில் பயணித்த களனி பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் களனி பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியரே உயிரிழந்துள்ளார்.இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் மீண்டும் வீடு நோக்கி திரும்புகையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.