யாழ். சென்று திரும்பிய போது – களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் என்.டி.ஜி.கயந்தவின் மனைவியும் உயிரிழந்தார்
களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரான கலாநிதி என்.டி.ஜி.கயந்த குணேந்திரவின் மனைவியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த 18ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கலாநிதி என்.டி.ஜி.கயந்த தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் யாழ்ப்பாணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயர விபத்து ஏற்பட்டது.குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த லொறி ஒன்றில் மோதியது. இதில் கலாநிதி கயந்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.வேனை ஓட்டி வந்த அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் கலாநிதி கயந்தவின் மைத்துனர் உட்பட மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.துரதிர்ஷ்டவசமாக, வேனின் ஓட்டுநராக இருந்த கலாநிதி கயந்தவின் மைத்துனரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.