யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இந்த வீடு இலங்கையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இந்த வீடு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.