யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (21) இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.