லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ உளுந்து 100 ரூபாவால் குறைப்பு புதிய விலை 1400 ரூபா,400 கிராம் பால்மா 40 ரூபாவால் குறைப்பு புதிய விலை 910 ரூபா, ஒரு கிலோ கோதுமைமா 10 ரூபாவால் குறைப்பு புதிய விலை 180 ரூபா, 1 கிலோ வெள்ளை பச்சை அரிசி 4 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 200 ரூபா, 1 கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவால் குறைப்பு புதிய விலை 260 ரூபா, 1 கிலோ கீரி சம்பா அரிசி 2 ரூபாவால் குறைப்பு புதிய விலை 258 ரூபா இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.