Wednesday, January 22, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படையிடம் இருந்து வந்த அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படையிடம் இருந்து வந்த அறிவித்தல்

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475,P481,ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்

எதிர்வரும் 24.01.2025 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55’N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும்,

அதே போன்று எதிர்வரும் 27.01.2025 அன்று காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55’N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E.ஆகிய குறித்த கடற்பரப்புகளில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படையிடம் இருந்து வந்த அறிவித்தல்

இதையும் படியுங்கள்:  போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!