Friday, March 21, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் வீதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் வீதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் வீதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல் மண்ணினால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக காப்பேற் வீதியால் பயணம் செய்யும் வேளை குறித்த மணல் பகுதியை கடந்து செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் சறுக்கல் நிலை ஏற்பட்டு விபத்துக்குட்படக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுகின்றது.நேற்று (19) தொடக்கம் குறித்த மணல் அம்பன் வீதியில் பரவப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.இது எவ்வாறு,எப்படி கொட்டப்பட்டது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லும் போது பொலிசாரால் துரத்திச் சென்றவேளை வீதியில் கடத்தல்காரர்கள் மணலை கொட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.எவ்வாறு இருந்தாலும் குறித்த மணல் மண் வீதியில் கொட்டப்பட்டதை அகற்றுவதற்கு பிரதேச சபையோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது மருதங்கேணி பொலிசாரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பகல் வேளைகளில் ஒரளவு வாகனங்களை செலுத்தக் கூடிய நிலை இருந்தாலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது மிக ஆபத்தான பயணமாகவே இருக்க போகின்றது.இதனால் சற்றேனும் கவனயீனமாக பயணிக்க கூடிய ஒருவர் குறித்த வீதியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையை அடையக் கூடிய நிலமை காணப்படுகின்றது
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் வீதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல்

இதையும் படியுங்கள்:  யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!