வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா இன்று(4) இரவு மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது. இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.