வடிந்துவரும் வெள்ளம்; முகாம்களில் உள்ளோர் வீடு திரும்பினர்

வவுனியாவில் மழைவீழ்ச்சி குறைந்தமையால் தாழ்நிலப்பகுதிகளிலிருந்து வெள்ளநீர் வடிந்தோடிவருவதுடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் கடந்த இருதினங்களாக மழை பெய்துவந்தது, இதனால் பல்வேறு பகுதிகளிலும் இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது.தற்போது மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் வெள்ளம் தேங்கிய பகுதிகளிலிருந்து நீர் வடிந்தோடி வருகின்றது.இன்றுமாலை நிலவரப்படி1516 குடும்பங்களை சேர்ந்த5224 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3022 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பாதிப்பால் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அத்துடன் சீரற்றகாலநிலையால் இதுவரை 204வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 55குளங்களில் பாரிய உடைவு ஏற்பட்டுள்ளது. இதேவளை மழை குறைவடைந்துள்ள நிலையில் கடும்குளிரான காலநிலை நிலவிவருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here