Tuesday, April 1, 2025
Homeஇலங்கைவவுனியா -மன்னார் வீதியில் விபத்து : பெண் படுகாயம்

வவுனியா -மன்னார் வீதியில் விபத்து : பெண் படுகாயம்

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியிக்கு திரும்ப முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  காசு எவ்ளோ வேணுமோ எடுத்துக்கோங்க ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சீன நிறுவனம்(Video))
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!