முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.பிரபாகரனை தேடுவது போல இவர் நேற்றுவரை தனது சமூக மத செல்வாக்கை பாவித்து கைதுசெய்யப்படுவதை தவிர்த்து வந்தார்.இவர் தனது முகவரியாக வழங்கியுள்ள வீட்டில் உண்மையில் பௌத்தமதகுரு ஒருவர் வசிக்கின்றார்.
கடந்த சில நாட்களாக பொலிஸார் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,மற்றும் ஏனையவர்களிடம் இவர் எங்கிருக்கின்றார் என விசாரணை செய்தனர்.செல்வாக்குள்ளவர்களுடன் இவர் உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளார்,இவரது வீட்டை சோதனையிட்டவேளை 795 மதுபான போத்தல்கள் அங்கு காணப்பட்டன.100க்கும் மேற்பட்ட ஆடம்பர பரிசு கூடைகள் காணப்பட்டன.அரசாங்க ஊழியர்களால் சிறிய பரிசுப்பொதியை கூட பெறமுடியாது, இவரால் எப்படி இதனை பெற முடிந்தது.அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளன.இதன் காரணமாகவே இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விட ஆபத்தானவர் என தெரிவிக்கின்றேன் இவர் ஒரு பிசாசு.