Sunday, December 29, 2024
Homeஇலங்கைவெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது.இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இருந்த போதிலும் இதுவரையில் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைவடையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தனவை தொடர்பு கொண்டு வினவியது.இதற்கு பதிலளித்த அவர், முட்டையின் விலை குறைவடைந்ததன் ஊடாக மாத்திரம் வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என தெரிவித்தார்.அத்துடன் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் கோதுமை மா மற்றும் வெண்ணெய் என்பவற்றின் விலையும் குறைவடைய வேண்டும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments