தமிழரசு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சோ. சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் இல்லத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை(31) மாலை சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அத்துடன், அவரது புதல்வர்கள் இருவருக்கும், புதல்விக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார் .முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளர் ரொஷான் சமீம் ஆகியோரும் அதன்போது உடனிருந்தனர்.