மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் பிற்பகல் 01.00 மணி வரையான காலப்பகுதியில் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.