Wednesday, February 5, 2025
Homeஇலங்கைU.K நகரில் உணவு ஒவ்வாமையால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம்

U.K நகரில் உணவு ஒவ்வாமையால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம்

UK – Liverpool Bootle நகரில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக 28 வயதான இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும் , UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக ( allergic reaction to seafood ) உயிரிழந்துள்ளார் .
அன்றைய தினம் திருமதி காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் தனது 15 மாதமான மகன் மற்றும் இலங்கையிலிருந்து மகளின் குடும்பத்தை பார்க்க வந்திருந்த அவரது தாயாருடன் இருந்துள்ளார் .
வேலைக்கு சென்ற கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் ஆம்புலன்ஸை அழைத்தும் மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை.

இதையும் படியுங்கள்:  வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!