Home » இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை

by newsteam
0 comments
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் (16.02.2025) பார்வையிட்டனர்.இதன்போது துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர். குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள் ,பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பதுதொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கெளரவ அமைச்சர் அவர்கள் அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கெளரவ அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும் கலந்து கொண்டார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். வருகை

You may also like

Leave a Comment

error: Content is protected !!