Site icon Taminews|Lankanews|Breackingnews

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய “மன்னரின் விருந்தினராக” 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய "மன்னரின் விருந்தினராக" 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில் “மன்னர் விருந்தினராக” அழைக்கப்பட்டு ஹஜ் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.இஸ்லாமிய உலகம் முழுவதும் உள்ள மத, கல்வி மற்றும் அறிவுசார் தலைவர்களுடன் உறவுகளை வலுப்படுத்தவும், நாகரிக மற்றும் மத உரையாடலை ஊக்குவிக்கவும், தனித்துவமான மற்றும் மூலோபாய முயற்சியாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி அவர்களின் கோரிக்கைக்கமைய
இம்முறையும் இலங்கைக்கு 20 பேர் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.அதேபோல் வருடாவருடம் இலவசமாக உம்ரா செய்யும் சந்தர்ப்பமும் தூதுவர் மூலமாக இலங்கை மக்களுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version