Home » இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை – இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை – இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

by newsteam
0 comments
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவேளை உயிரிழந்த நால்வரின் உடல்களை ஒப்படைக்கவேண்டும்.ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!