Home » ஈழத்து நாடகத்தின் பெரு விருட்சமான குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து நாடகத்தின் பெரு விருட்சமான குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

by newsteam
0 comments
ஈழத்து நாடகத்தின் பெரு விருட்சமான குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்.குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!