இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார். நேற்று மதியம் யாழ் வந்த விமானம் ஊடாக பெண் வருகை தந்த்தாக கூறப்படுகின்றது.குறித்த பெண் உடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தமை பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது தெரியவந்தது.இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சையின் பின் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.