Home » உணவருந்த சென்ற 6 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவருந்த சென்ற 6 மாணவர்கள் வைத்தியசாலையில்

by newsteam
0 comments
உணவருந்த சென்ற 6 மாணவர்கள் வைத்தியசாலையில்

கினிகத்தேனை நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று (18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேனை நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த நிலையில், குறித்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்தியுள்ளனர்.ஹோட்டலில் இருந்த அறையொன்றின் அடிதளத்தில் பலகைகள் உடைந்ததையடுத்து மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர்.

சுமார் 15 அடிவரை பள்ளத்துக்கு மாணவர்கள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.இதனால் காயமடைந்த மாணவர்களை பிரதேசவாசிகள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையிலும், சுகாதார பாதுகாப்பு இன்றியும் இயங்கி வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!