புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் டிரக் வண்டி நுழைந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வண்டி மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய டிரக் வண்டியை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று மாலை நியூ ஒர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகில் டிரக் வண்டி, மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் வண்டி அதிவேகமாக மக்கள் மீது மோதியது.இதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார், மேலும் பொலிஸார், பதில் தாக்குதல் நடத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி குறித்த தகவல் வெளியாகவில்லை.சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஒர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும். போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.