Thursday, January 9, 2025
Homeஉலகம்ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ரஷ்யா

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ரஷ்யா

ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவில் கரேலியா மாகாணத்தில் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முழு நேர படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு 100,000 ரஷியன் ரூபிள் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த புதிய சட்ட விதிமுறை படி, இறந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு இந்த தொகை கிடைக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் குழந்தை இறக்கும் பட்சத்தில் தொகை திரும்பப் பெறப்படுமா என்பன உள்ளிட்ட தகவல்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.மேலும் ஊனமுற்ற குழந்தையைப் பெற்றெடுக்கும் நபர்களுக்கு இந்த விதிமுறை பொருந்துமா என்பனவற்றையும் இந்த சட்ட விதிமுறைகள் தெளிவுபடுத்தவில்லை.

கரேலியா மாகாணத்தைப் போலவே ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இது போன்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவில் 11 பிராந்திய மாகாணங்கள் ,குழந்தை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  மது குடிக்கும் போட்டி: நண்பர்களின் சவாலால் உயிரை விட்ட யூடியூப் பிரபலம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!