இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கடுமையான சுவாச தொற்று காரணமாக இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.குறித்த சுவாச தொற்றின் விளைவாக அவருக்கு நியூமோனியா நோய் நிலைமை ஏற்பட்டது.சுமார் 5 வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஆபத்தான கட்டத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.