கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றம்சாட்டிய டொனால்டு டிரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026-ம் ஆண்டு அமெரிக்கா ஜனவரி 22-ம் தேதி வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற சில மணி நேரங்களில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, முக்கிய நன்கொடையாளரின் நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் முன்பு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்கூட்டியே தகவல் அறிவிக்க வேண்டும். இதோடு 1948 அமெரிக்க சட்டசபை கூட்டுத் தீர்மானத்தின் கீழ் வாஷிங்டனின் நிலுவை தொகையை செலுத்த வேண்டும்.ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மிகப்பெரிய நிதி பங்களிப்பை வழங்குகிறது. ஒட்டுமொத்த நிதியில் இருந்து சுமார் 18 சதவீத தொகையை அமெரிக்கா உலக சுகாதார மையத்திற்கு வழங்குகிறது.