எகிறும் வெப்பநிலை - சிக்கித் தவிக்கும் 130 மில்லியன் மக்கள்

படைத்துவரும் நிலையில், சுமார் 130 மில்லியன் மக்கள் மொத்தமாக வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், நாடு முழுவதும் 130 மில்லியன் மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

சராசரி வெப்பநிலையை விட 15F முதல் 30F வரை அதிக வெப்பநிலை காணப்படும் என்றும், அடுத்த வாரமும் இதே நிலை நீடுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.மேலும், அழுத்தப்பட்ட வெப்பம் மற்றும் ஈரப்பதம் பசிபிக் வடமேற்கின் சில பகுதிகளில், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கில் 100F க்கு மேல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்றும் தேசிய வானிலை சேவை குறிப்பிட்டுள்ளது.சனிக்கிழமை மாலை வரை கலிபோர்னியாவின் பெரும்பகுதி முழுவதும் சிவப்புக் கொடி எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தீயை உண்டாக்கும் செயல்களைத் தவிர்ப்பது மற்றும் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது போன்ற கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர்.கலிபோர்னியா மாகாணத்தில் இருபதுக்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24,000 ஏக்கர் நிலப்பரப்பு பற்றியெறிந்துள்ளது. இதனிடையே, கிழக்கு அமெரிக்காவின் பால்டிமோர் மற்றும் மேரிலாந்தின் பிற பகுதிகள் அதிக வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here