அமெரிக்க பாடசாலையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பாடத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள ஸ்கியாடூக் என்ற பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் சில கேள்விகளைக் கொடுத்து ஆராய்ச்சி செய்து விடையளிக்க வேண்டுமென வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டுப்பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியை பார்த்த மாணவியின் தாயார் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார்.அக்கேள்விகளானது, உலகம் உருவானது எப்படி?, அதனை உருவாக்கியது யார்?, எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?, ஒழுக்கம் என்றால் என்ன?, மதம் என்றால் என்ன?, கிறிஸ்தவம் என்றால் என்ன?,கி றிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?, கடவுள் இருப்பது உண்மையா?,
சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொண்டனரா? என 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.இதனைப் பார்த்த இணையவாசிகள் பகிர்ந்து பாடசாலைக் குறித்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள்.