உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்று ரஷ்ய தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக போலந்து செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்களின் விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை, இத்தாக்குதலில் சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாகவும், மற்றுமொரு பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல பணிகளைச் செய்யும் பெரிய மருத்துவமனையாகத் திகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.