உக்ரைனில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உக்ரைன் அதிபருக்கும், அமெரிக்க அதிபர் #ட்ரம்புக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் ஆக்ரோசமுற்ற டொனால்ட் ட்றம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுமாறு உக்ரைன் அதிபரை கேட்டுக்கொண்டார்.இதனை தொடர்ந்து உக்ரைன் அதிபர் அங்கிருந்து இடைநடுவில் வெளியேறி சென்றார்.
அவர் வெளியேறியதை தொடர்ந்து #ஜெலென்ஸ்கி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொனால்ட் ட்றம்ப், “அவர் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதராக நடந்து கொள்ளவில்லை, முறையாக உடுக்க தெரியவில்லை, பேச தெரியவில்லை, அமெரிக்காவையும், அமெரிக்காவின் அந்தஸ்த்தையும் மதிக்க தவறி விட்டார், இனிமேல் அவராக திரும்பி வந்தபோதிலும், நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்திபிட்டோம்” என்றார்.